Type Here to Get Search Results !

ஸ்டாலினை எதிர்த்து, அதிமுக சார்பில் ஆதி ராஜாராம்…..

 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து, அதிமுக சார்பில் ஆதி ராஜாராம் கொளத்தூர் தொகுதியில் களம்காணவுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள தொகுதிகள் மற்றும் அந்த தொகுதிக்கான வேட்பாளர் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டது. ஏற்கனவே முதற்கட்டமாக தமிழக முதல்வர் மற்றும் துணைமுதல்வர், அமைச்சர்கள் தொடர்பான பட்டியல் வெளியான நிலையில், இன்று மொத்தமாக 171 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், திமுக சார்பில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் களம்காணவுள்ளார்.

எப்போதுமே கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடும் தொகுதி என்றாலே பரபரப்பாக இருக்கும்.

அந்த வகையில், திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலின் களமிறங்கவுள்ள நிலையில், எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்ற எதிர்பார்ப்பும் இருக்கும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் திருநங்கை அப்சரா ரெட்டி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ள நிலையில், இதன்படி, அதிமுகவின் வேட்பாளராக ஆதி ராஜாராம் களம்காணவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆதி ராஜாராம் கடந்த 2006 ஆம் வருடத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட மு.க ஸ்டாலினுக்கு எதிராக களம்கண்டு 2,468 வாக்குக்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தீவிர ஜெயலலிதாவின் விசுவாசியாக கருதப்படும் ஆதி ராஜாராம், இந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் காலம்காண்கிறார். இதனால் கொளத்தூர் தொகுதியில் தேர்தல் பலப்பரீட்சை விறுவிறுப்பாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.