Type Here to Get Search Results !

காங்கிரசுக்கு திமுக ஒதுக்கவிருக்கும் தொகுதிகள் திமுக வட்டாரத்தில் இருந்து சில தகவல்

 
திமுகவுடன் தொகுதி பங்கீட்டை ஒரு சில அழுத்தம் மற்றும் காரணங்களுக்காக காங்கிரஸ் முடித்துக் கொண்டாலும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம் என்பதை உறுதி செய்வது குதிரைக் கொம்பாகவே உள்ளது.

நீண்ட இழுபறிக்கு பிறகு 25 தொகுதிகளை திமுகவிடம் பெற்றது காங்கிரஸ். இதைத் தொடர்ந்து, நடந்த பிற கட்சிகளுடனான கூட்டணி ஒப்பந்தத்திற்கு பிறகு, தொகுதி ஒதுக்கீடும் ஓரளவுக்கு பிரச்சனைகளுடன் முடித்து வருகிறது திமுக. ஆனால், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதியை பிரித்து தருவது என்பது திமுகவிற்கு தீராத சிக்கலாக இருந்து வருகிறது.

காங்கிஸ் தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்ற 8 தொகுதிகளுடன் 7 தொகுதிகளை அளிக்க திமுக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கேட்டு வரும் முதுகுளத்தூரில் திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் களமிறங்குகிறார். எனவே, அந்தத் தொகுதியை கொடுக்க முடியாது என திமுக கூறிவிட்டது. இதேபோல, திமுக போட்டியிட முடிவு செய்துள்ள தொகுதிகளில் ஒருசிலவற்றை காங்கிரஸ் கேட்டு பெறுவதில் தீவிரமாக இருந்து வருகிறது. இதனால், இருகட்சியினரிடையே தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.

காங்கிரசுக்கு திமுக ஒதுக்கவிருக்கும் தொகுதிகள் திமுக வட்டாரத்தில் இருந்து சில தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது.

அவை பின்வருமாறு :

  1. வேளச்சேரி
  2. மதுரவாயல்
  3. பொன்னேரி
  4. ஸ்ரீவைகுண்டம்
  5. ஆலங்குளம்
  6. சிவகாசி
  7. பட்டுக்கோட்டை
  8. குளச்சல்
  9. விருதாச்சலம்
  10. ஊத்தங்கரை
  11. சோளிங்கர்
  12. உதகை
  13. விளவங்கோடு
  14. கிள்ளியூர்
  15. முதுகுளத்தூர்
  16. மதுரை வடக்கு
  17. காரைக்குடி
  18. வேதாரண்யம்
  19. நாங்குநேரி
  20. அறந்தாங்கி
  21. ஓமலூர்
  22. திருவாடனை
  23. பாபநாசம்
  24. கிருஷ்ணராயபுரம் (தனி)
  25. கோவை தெற்கு

கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள்தான் கொடுக்கவில்லை, கேட்கும் தொகுதிகளையாவது கொடுக்கலாமே என்று திமுகவினருடன் 3வது கட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.