Type Here to Get Search Results !

தமிழகத்தில் கொரோனாவால்…. 24 மணி நேரத்தில் 10,941 பேருக்கு பாதிப்பு….!

 

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இன்று மொத்தமாக 10,941 பேருக்கு பாதிப்பு உறுதியாகி, மொத்த தமிழக கொரோனா பாதிப்பு 10,02,392​ ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்தது. பல தடுப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டது.

இதனை மக்கள் முறையாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்தது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும் ஊரடங்கு கடுமையாக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று கொரோனாவால் 10,941 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,02,392 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6,172 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 9,14,119 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 44 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 13,157 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 3,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,86,569 ஆக உயர்ந்துள்ளது.

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.