Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும்…. அமெரிக்கா

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியா சென்றால் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், நாள் ஒன்றுக்கு சராசரியாக 2.5 லட்சத்திற்கு மேல் பாதிப்பு பதிவாகி வருகிறது. அதேநேரத்தில் தினமும் 1700க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். கொரோனா தீவிரமாக பரவி வருவதால் இந்தியாவை சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளது இங்கிலாந்து. இந்நிலையில் இந்தியாவிற்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியா சென்றால் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தாலும் இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா செல்ல திட்டமிட்டிருந்த பல அமெரிக்கர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். கொரோனா பாதிப்பில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.