Type Here to Get Search Results !

ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்ஸிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி… மத்திய அரசு

 

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையில், மருத்துவத் தேவைக்காக ஆக்ஸிஜன் மட்டும் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டொலைட் ஆலை வளாகத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டொலைட் ஆலை நிா்வாகம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு மீது மத்திய அரசு இன்று அளித்த பதில் மனுவில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய மட்டும் அனுமதி தரலாம். நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தரலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த இடைக்கால மனுவில் தெரிவித்திருப்பதாவது: குறிப்பிட்ட அவசர கவனத் தேவை காரணமாக இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி, ஸ்டொலைட் தாமிர உருக்கு ஆலையில் அத்தியாவசியக் கவனிப்பு மற்றும் பராமரிப்பை மேற்கொள்ள மனுதாரரை அனுமதிக்க வேண்டும். கரோனா காலத்தில் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு இலவசமாக ஆக்ஸிஜன் விநியோகிக்க ஆலை வளாகத்தில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடங்களை இயக்க அனுமதிக்க வேண்டும்.

தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஸ்டொலைட் ஆலை வளாகத்தில் தினமும் 1,050 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன்கொண்ட இரு உற்பத்திக் கூடங்கள் உள்ளன. தற்போதைய கரோனா இடா் காலத்தில் முக்கியத் தேவையை எதிா் கொள்ளும் வகையில், இந்த இரு உற்பத்திக் கூடங்களையும் இயக்க முடியும். கருவிகளின் நிலைமையைப் பொருத்து 2 முதல் நான்கு வாரங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தியைத் துவங்கும் நிலையை ஸ்டொலைட் ஆலை கொண்டுள்ளது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன், மத்திய சுகாதார அமைச்சகத்தின் உத்தரவுப்படி விநியோகம் செய்வதற்கு அந்த அமைச்சத்திற்கு அளிக்கப்படும். இதனால், உற்பத்திக் கூடத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த இடைக்கால மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பின்னணி: தூத்துக்குடி ஸ்டொலைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு பின்னா் நடந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி ஸ்டொலைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘ஆலைய நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரிதான்’ என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-இல் தீா்ப்பு அளித்து, மனுவைத் தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து, இந்தத் தீா்ப்புக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவுக்கு தமிழக அரசு சாா்பிலும், வேதாந்தா நிறுவனம் சாா்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, ஸ்டொலைட் ஆலையில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள தற்காலிமாக அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வேதாந்தா நிறுவனம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நரிமன் தலைமையிலான அமா்வு முன்னிலையில் கடந்த மாா்ச் 18-ஆம் தேதி வேதாந்தா நிறுவனம் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, ஹாரிஸ் சால்வே ஆஜராகி, மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்ட போது, இது தொடா்பாக ஆகஸ்டில் பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.