Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் முழு விவரம் இதோ….

 

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் திங்கள்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன.அதன்படி,

  • அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை.எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள். சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை.
  • பெரிய கடைகள்,ஷாப்பிங் மால்கள் இயங்க அனுமதி இல்லை
  • வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர இ- பதிவு முறை தொடரும்.
  • இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்
  • சலூன்கள் இயங்க அனுமதியில்லை
  • அனைத்து உணவகங்களும் தேநீர் கடைகள் இயங்க அனுமதி
  • உணவகங்களில் உட்காந்து சாப்பிட அனுமதி இல்லை பார்சலுக்கு மட்டும் அனுமதி
  • பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை
  • இறுதி ஊர்வலத்தில் 25 பேர் மட்டுமே அனுமதி
  • திருமண விழாக்களில் 50 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க அனுமதி
  • வாடகை டாக்ஸியில் ஓட்டுநர் உட்பட மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி
  • ஆட்டோகளுக்கு ஓட்டுநர் உட்பட 2 பேருக்கு மட்டுமே அனுமதி
  • வீட்டை விட்டு வெளியே செல்வோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்
  • உடற்பயிற்சி கூடங்கள், பார்கள் இயங்க அனுமதியில்லை
  • வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை.
  • தனியாக செயல்படுகின்ற மளிகை மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.
  • அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.
  • விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும்.
  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம் 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.
  • அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை.

பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அரசு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.