Type Here to Get Search Results !

விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதே காரணமா…? அமைச்சர் அதிரடி விளக்கம்…!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விவேக் நேற்று காலை 11 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இருதய துடிப்பு குறைந்ததை அடுத்து ஆஞ்சியோ செய்யப்பட்டு, எக்மோ கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விவேக்கின் உட ல் நிலை குறித்து இன்னும் 24 மணி நேரம் கழித்தே உறுதியாக சொல்ல முடியும் என கெடு விதித்திருந்த நிலையில் , இன்று அதிகாலை 4.35 மணி அளவில் மரணமடைந்தார். 
நடிகர் விவேக் நேற்று முன்  தினம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதோடு, அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நேற்று முன் தினம் தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக்கிற்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தடுப்பூசிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 
இருப்பினும் பல்வேறு தரப்பினரும் நடிகர் விவேக்கிற்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “அரசின் மீதும் தடுப்பூசி மீதும் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியமானது. விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதை வேறு விதமாக இணைக்கக்கூடாது” என்று விளக்கமளித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.