Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனாவுக்கு 2,11,298 பேர் பாதிப்பு… 2,83,135 பேர் மீண்டனர் – 3,847 பேர் மரணம்

இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,11,298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,73,69,093 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த 24 மணி நேரத்தில் 3,847 பேர் மரணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,83,135 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆக 2,46,33,951 பேராக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 24,19,907 பேராக குறைந்துள்ளது.
கொரோனா இரண்டு அலை தீவிரமாக உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மக்கள் ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால் திண்டாடி வருகின்றனர். பல மாநிலங்களில் தளர்வுகள் அற்ற லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சம் பேராக குறைந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2,11,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,73,69,093ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,83,135 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,46,33,951 ஆக அதிகரித்துள்ளது. நோயினால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 3,847 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,15,235 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 24,19,907 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 20,26,95,874 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.