Type Here to Get Search Results !

காவல் ஆய்வாளரிடம் அராஜகம் செய்த திமுக பிரமுகர்….!

 
குடிபோதையில் அராஜகம் செய்த திமுக பிரமுகர், வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பெண் காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை நாட்களில் முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஊரடங்கு விதிமீறலுக்காக அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியில் அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது திமுகவை சேரந்த பொங்கலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரவி என்பவர் தனது நண்பர்களுடன் குடிபோதையில் காரில் வந்துள்ளார்.

காரை நிறுத்தி வாகன சோதனை செய்த போலீசார் முக கவசம் அணியாமல் அமர்ந்திருந்த ரவியிடம் கவசம் அணியாமல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி ஏன் வெளியே சுற்றுகிறார்கள் என கேட்டுள்ளனர். குடிபோதையில் இருந்த திமுக பிரமுகர் ரவி பெண் காவல் ஆய்வாளர் கோமதியிடம் “நாங்க ஆட்சிக்கு வந்துட்டோம் கேஸ் போடறதுனா போட்டுக்கோ” என தனது வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவருடன் வந்த நண்பர்கள் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போதும் திமுக பிரமுகர் ரவி ஆபாச வார்த்தைகளால் தனது நண்பர்களையே அர்ச்சனை செய்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தி அவிழ்ந்த வேட்டியோடு காரில் அமரவைத்து அவரது நண்பர்கள் அவரை அழைத்துச் சென்றனர்.

பெண் காவல் ஆய்வாளர் முன் தனது வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வர் ஆவதற்கு முன்பே அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தி அராஜகத்திற்கு ஆரம்ப புள்ளி வைத்த திமுக பிரமுகர்களின் இது போன்ற ரகங்களை என்னும் ஐந்து ஆண்டுகளுக்கு எப்படி சமாளிப்பது என தெரியாமல் காவல்துறையினர் திகைத்துப் போயுள்ளனர்.

மேலும் காவல் ஆய்வாளரிடம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பொங்கலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரவி மீது திமுக தலைமை கழகம் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.