Type Here to Get Search Results !

அதிமுகவின் உட்கட்சி விவகாரம் முடியாது போல தெரிகிறது.. ஓபிஎஸ்ஸின் அதிரடி திட்டம்….

 

இப்போதைக்கு அதிமுகவின் உட்கட்சி விவகாரம் முடியாது போல தெரிகிறது.. ஓபிஎஸ்ஸின் அதிரடி திட்டம் குறித்த உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..!

அதிமுகவுக்குள் இந்த நிமிஷம் வரை எடப்பாடி பழனிசாமியின் கொடிதான் பறக்கிறது… ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு கரைந்து கொண்டிருக்கிறது.

எப்படியாவது எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு முட்டி மோதி பார்த்தார் ஓபிஎஸ்… ஆனால், அவரை யாருமே கண்டுகொள்ளவில்லை.. “கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் உங்களுக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவியும் உங்களுக்கா” என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்டதுமே திகைத்து போனாராம் ஓபிஎஸ்.

அமைச்சர்கள், நிர்வாகிகள் என பெரும்பாலானோர் எடப்பாடி பக்கமே நின்றனர்.

அதேபோல, கொங்கு வேளாளர்களின் கை இந்த முறையும் அதிமுகவுக்குள் அதுவும் எடப்பாடி பழனிசாமி பக்கமே ஓங்கியுள்ளது.. தென் மண்டலத்திலும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் ஆதரவும் எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதுதான் இந்த முறை தேர்தலில் அதிமுக நமக்கு தந்த ரிசல்ட்!

இப்படிப்பட்ட சூழலில் ஓபிஎஸ் சற்று திணறியே போயுள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால் எக்காரணத்தை கொண்டும் ஒதுங்கி மட்டும் போய்விட மாட்டார், எப்படியும் எடப்பாடி பழனிசாமியுடன் மோதுவார் என்கின்றனர். கடந்த 12-ம்தேதி எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் அன்று, நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தாலும், ஓபிஎஸ் வேறு ஒரு கணக்கில் இருக்கிறாராம்.. அதாவது ஓபிஸ்ஸும் சசிகலாவும் இணைந்து விரைவில் அதிமுகவை தம் வசப்படுத்த முயற்சிக்கலாம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது.

ஏற்கனவே சசிகலாவின் மறைமுக ஆதரவில்தான் ஓபிஎஸ் இருப்பதாக சொல்லப்பட்டாலும், தற்போது அதிமுகவை கைப்பற்ற ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இவர்கள் 2 பேருமே உள்ளனர். ஆனால், இவ்வளவு நாள் சசிகலாவை சென்று ஆதரவு தெரிவிக்காத அதிமுகவின் முன்னாள்கள், இனி எப்படி சசிகலாவுக்கு ஆதரவு தருவார்கள் என்ற சந்தேகமும் எழுகிறது..

அதேபோல, அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தைக் கைப்பற்ற தினகரன் தரப்பு முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறதாம்.. இது தொடர்பாக விரைவில் நடவடிக்கைகளும் தொடங்குமாம். அதாவது அடுத்த வாரமே அதிரடி நடவடிக்கைகள் தொடங்கப் போவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. தேர்தல் சமயத்திலேயே அதிமுக, எப்படியும் இரண்டாக, 3ஆக உடையும் என்று அரசியல் நோக்கர்கள் சொன்னார்கள்.. அதற்கான அறிகுறிதான் தற்போது ஆரம்பித்துள்ளதாக தென்படுகிறது.. பார்ப்போம்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.