Type Here to Get Search Results !

சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட என்ன கிடைக்கும்

 

‎வெள்ளிக் கிழமைகளில்‬ நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன்-மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

‎இரண்டு‬ சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ‪ஒற்றுமையாக‬, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.

கொடிய‬ கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும்,மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். ‪

ஸ்ரீநரசிம்மரின்‬ எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

‎ஆலய‬ திரிசூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும். ‪

கொடுத்த‬ கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய‬, திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு, பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்யவேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும். சிவன் கோவிலில் கால பைரவரையும்,விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரை யும்வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

சிவன்‬ கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.