Type Here to Get Search Results !

அதிக முறை ஒரே மாஸ்க் பயன்படுத்தினால் கருப்பு பூஞ்சை நோய் ஏற்படலாம்….!

இந்தியா முழுவதும் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கிடையில் கொரோனாவிலிருந்து (Coronavirus) மீண்டு வருபவர்களை கருப்பு பூஞ்சை (Black Fungus) என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் காரணமாக  தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உயர்பலிகளும் நிகழ்ந்துள்ளது. மேலும் இந்த கருப்பு பூஞ்சை நோய் புதிய தொற்று இல்லை. இவை ஏற்கனவே இருக்கும் நோய் தான் என்றாலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை இது அதிகமாகத் தாக்குகிறது.
இந்நிலையில், கருப்பு பூஞ்சை பாதிப்பு பற்றி எய்ம்ஸ் பேராசிரியர் டாக்டர் சந்திரா கூறுகையில், “நீரிழிவு நோய் அதிகம் உள்ளவர்கள், கொரோனா சிக்சிச்சையின்போது டோசிலிசுமாப் மருந்துகளுடன் ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொண்டவர்கள், மூச்சுத் திணறல் பிரச்சினை உள்ளவர்கள் ஆகியேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் கருப்பு பூஞ்சை நோயால் எளிதாகப் பாதிக்கப்படுபவர்களுக்கு Posaconazole மருந்தை வழங்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருப்பு பூஞ்சையின் அறிகுறிகளில் கவனம் செலுத்துங்கள்
கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள் சரியான நேரத்தில் கவனிக்கப்பட்டால், நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும்:
– கண்களில் அல்லது கண்களைச் சுற்றி சிவப்பாக இருப்பது அல்லது வலி இருப்பது
– அடிக்கடி காய்ச்சல்
– தலையில் கடுமையான வலி
– சுவாசம் மற்றும் மூச்சுத் திணறல்
– இரத்த வாந்தி
– மன நிலையில் மாற்றம் 
கருப்பு பூஞ்சையை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்
நோயாளி ஹைப்பர் கிளைசீமியாவைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அதாவது நோயாளிகள் தங்களது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். கோவிட் -19 ல் இருந்து மீண்டு, மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர், வீட்டிற்கு வந்த பிறகும் இரத்த குளுக்கோஸ் அளவை குளுக்கோமீட்டரின் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். ஸ்டெராய்டுகளை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மருந்துகளுக்கான சரியான அளவுகள் மற்றும் நேர இடைவெளிகளை அறிய வேண்டும். மேலும், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். 
கருப்பு பூஞ்சையை தவிர்க்க என்ன செய்யக்கூடாது
நோயின் அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். மூக்கு அடைபட்டால், அது சைனஸ் பிரச்சனை தான் என எண்ணி அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். குறிப்பாக கோவிட் -19 நோயாளிகள் மூக்கடைப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு சந்தேகம் வந்தால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். முகோர்மைகாசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டால் நோயாளி இறக்க வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில், அறிகுறிகளைக் கண்டறிந்த பிறகு சரியான நேரத்தில் சிகிச்சை எடுப்பது மிகவும் முக்கியம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.