Type Here to Get Search Results !

CBSE பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா….? மாநிலங்கள் கூறுவது என்ன…?

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியதை அடுத்து, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் சென்ற மாதம் அறிவித்தது. ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என்று கூறியது.
இந்நிலையில் சிபிஎஸ்இ (CBSE) தேர்வுகள் தொடர்பாக முடிவு எடுக்க, வீடியோ கான்பரன்சிங் மூலம் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கல்வி அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசாங்கம் இரண்டு மாற்று வழிகளை முன்மொழிந்தது – ஒன்று வரையறுக்கப்பட்ட முக்கிய பாடங்களுக்கு மட்டுமே பரீட்சை நடத்தலாம் என கூறப்பட்டது.  இரண்டாவதாக,  அனைத்து பாடங்களுக்கும் தேர்வுகளை நடத்தலாம், ஆனால் தேர்வு நேரத்தை 3 மணிநேரத்திலிருந்து 1.5 மணி நேரம் வரை குறைக்கவும் எனவும், கேள்விகளை MCQ மற்றும் குறுகிய கேள்விகளாக அமைக்கலாம் எனவும் கூறப்பட்டது. இருப்பினும், மாநிலங்கள் மூன்றாவது வழியை கண்டறியலாம் எனக் கோரியுள்ளன. இந்த கூட்டத்தில், எந்தவொரு ஒருமித்த கருத்தும் எட்டப்படவில்லை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கொடுக்கப்பட்ட இரண்டு விதமான முறைகளில், COVID -19  தொற்று குறைந்து, சாதகமான நிலை ஏற்படும் போது, ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் எழுத்துத் தேர்வை நடத்துவதாக கூறின.​​
மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் தேர்வுகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாணவர்கள் இண்டர்னல் தேர்வு அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர். சில மாநிலங்கள் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என கோருகின்றன. மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், விரைவில் மத்திய அரசு முடி ஒன்றை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய அளவிலான கூட்டத்தில் JEE Main, JEE Advanced, மற்றும் NEET உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தத் தேர்வு எழுதும் மாணவர்கள் 17-18 வயதுடையவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கு முன்பு தடுப்பூசி போட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.