Type Here to Get Search Results !

கிழிந்த மாடல் மற்றும் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிவதற்கு தடை….. அரசு அதிரடி உத்தரவு

 

கிழிந்த மாடல் மற்றும் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிவது, உடல்பாகங்களில் வளையங்கள் அணிவது போன்றவற்றிக்கு தடை விதித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.

வடகொரிய தலைவர் தலைவர் கிம் ஜாங்-உன்,மேற்கத்திய தாக்கங்களைத் தடுக்க வினோதமான சட்டங்கள் அமல்படுத்துவதில் பெயர் பெற்றவர்.அந்த வகையில்,கிம் ஜாங்-உன் சமீபத்தில் கிழிந்த மாடல் மற்றும் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிவது, உடல்பாகங்களில் வளையங்கள் அணிவது,ஸ்பைக் உள்ளிட்ட ஹேர் ஸ்டைல் வைப்பது போன்றவை ‘முதலாளித்துவ வாழ்க்கை முறை’ மற்றும் இளைஞர்கள் மீதான மேற்கத்திய தாக்கங்கள் என்று கருதி அவைகளுக்கு ஒரு தடையை விதித்துள்ளார்.

அதன்படி,முதலாளித்துவ கலாச்சாரம் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில்,கலர்கலராக ஹேர் டை பூசிய ஸ்பைக் மற்றும் மல்லட் போன்ற பொது உடைமை கோட்பாடு அற்ற ஹேர் ஸ்டைல்கள் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.

மேலும்,புதிய சட்டங்களின் ஒரு பகுதியாக,ஆண்களும் பெண்களும் இதற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட 215 ஹேர் ஸ்டைல்களில் ஒன்றை மட்டுமே இனி வைக்க வேண்டும்.

இதனைத்தொடர்ந்து,கிழிந்த அல்லது டைட்டான ஜீன்ஸ், டி-ஷர்ட்கள் அணிவதற்கும்,மேலும் மூக்கு மற்றும் உதடுகளில் வளையங்கள் குத்துதல் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து,நாட்டின் ஆளும் தொழிலாளர் கட்சிக்கான செய்தித்தாளான ரோடோங் சின்முன் சமீபத்தில் கூறியதாவது,”ஒரு நாடு பாதிக்கப்படக்கூடியதாகவும்,அதன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு சக்தியைப் பொருட்படுத்தாமல் ஈரமான சுவரைப் போல இடிந்து விழும் ஒரு முக்கியமான படிப்பினை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது.

எனவே,முதலாளித்துவ வாழ்க்கை முறையின் சிறிதளவு அறிகுறியைப் பற்றியும்கூட நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,அவற்றிலிருந்து விடுபட போராட வேண்டும் “,என்று தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.