Type Here to Get Search Results !

Breaking news…. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஆகிறார் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேயர்….?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேயராக பதவி வகித்து வரும் எரிக் கார்சட்டி, 50, என்பவரை, இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் பதவிக்கு, அதிபர் ஜோ பைடன் பரிந்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் பதவி, ஜனவரி முதல் காலியாக உள்ளது. அமெரிக்க வெளியுறவு சேவை பிரிவின் இயக்குனர் டேனியல் ஸ்மித், தற்காலிக துாதராக தற்போது பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் நிரந்தர துாதரை நியமிக்கும் வகையில், அதற்கான தேர்வில் அதிபர் ஜோ பைடன் ஈடுபட்டுள்ளார்.
லாஸ் ஏஞ்சலஸ் நகர மேயரும், ஜோ பைடனின் பிரசார குழுவில் முக்கிய பொறுப்பு வகித்தவருமான எரிக் கார்சட்டியை, இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக நியமிக்க, அதிபர் பைடன் பரிந்துரை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
சீனா, ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான அமெரிக்க துாதர்களாக பரிந்துரைக்கப்பட உள்ளவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. ‘இறுதி அறிவிப்பு வரும் வரை, இந்த பெயர்கள் எதுவுமே உறுதி இல்லை’ என, வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியருக்கு முக்கிய பதவி….?
இந்திய வம்சாவளியை சேர்ந்த அருண் வெங்கட்ராமன், பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க அரசுக்கு, சர்வதேச வர்த்தக விவகாரங்களில், 20 ஆண்டுகளாக ஆலோசனைகள் வழங்கி வருகிறார். தற்போது அமெரிக்க வர்த்தக துறை அமைச்சரின் ஆலோசகராக பதவி வகித்து வருகிறார்.
பராக் ஒபாமா அதிபராக பதவி வகித்த போதும், சர்வதேச வர்த்தக விவகாரங்களில், அமெரிக்க அரசுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இவரை அமெரிக்காவின் வெளிநாட்டு வர்த்தக சேவை பிரிவின் இயக்குனர் ஜெனரலாக நியமிக்க, அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.