Type Here to Get Search Results !

தின பலன்… Daily Horoscope in Tamil…. இன்று உங்கள் ராசி பலன்…. Rashi Palan…

மேஷம்

மேஷம்: உங்களின் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


ரிஷபம்


ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். வியாபாரத்தில் சில புதுமைகளைச் செய்து லாபம் ஈட்டுவீர்கள். திடீர்

யோகம் கிட்டும் நாள்.

மிதுனம்


மிதுனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கனவு  நனவாகும் நாள் .


கடகம்


கடகம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்


சிம்மம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். புத்துணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி


கன்னி: கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும் . வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்

கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மாற்றம் ஏற்படும் நாள் .

துலாம்


துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டிவரும். மனஇறுக்கங்கள் உருவாக்கும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்துநீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்


விருச்சிகம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள் . வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும் . வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில்  எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.


தனுசு


தனுசு: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் அனுகூலம் உண்டு. பழையகடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள்.


மகரம்


மகரம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.


கும்பம்


கும்பம்: குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.  நல்ல மாற்றங்கள் ஏற்படும் நாள்.

மீனம்


மீனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களேசெய்து முடிக்கப் பாருங்கள்வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் மறைமுக பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விழிப்புணர்வு இருக்க வேண்டிய நாள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.