Type Here to Get Search Results !

பிரிட்டிஷ் அரசின் கண்களில் விரலைவிட்டு ஆட்டியவர் யார்…? காந்தியா… நேருவ…. இவர்கள் இல்லை…! சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் இவர்…?

 
தமிழகத்தின் பெரும்பாலானவர்களுக்கு
சுதந்திரம் என்ற வார்த்தையை சொன்னவுடன் தாத்தா காந்தி, மாமா நேரு போன்ற தலைவர்களை மட்டும் தேசியமயமாக்கிவிட்டு, மற்றவர்களை அந்தந்த மாநிலங்களுக்குச் சொந்தமாக்கிய காங்கிரஸின் பாடத் திட்டமே இதற்குக் காரணம். 
அன்று  பிரிட்டிஷ் அரசின் கண்களில் விரலைவிட்டு ஆட்டியவர். சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர். பிறவிப் போராளி, “வினாயக் தாமோதர் சாவர்க்கர்”ஆவார்.
அதற்கு தண்டனையாக பிரிட்டிஷ் அரசு அவருக்கு 31 ஜனவரி, 1911-ம் ஆண்டு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. அவர் ஐம்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் ஒரு நபருக்கு இரண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது சாவர்க்கருக்கு மட்டுமே. மற்றவர்கள் துவண்டபோது தைரியமாக எதிர்கொண்டார் சாவர்க்கர்.
பிரிட்டிஷார் அந்தமான் செல்லுலார் சிறையில் சாவர்க்கருக்கு அளிக்கப்பட்ட தண்டனை, சிறையின் சரித்திரத்தில் எந்த ஒரு கைதிக்கும் அளிக்கப்பட்டிருக்காது. மனிதாபிமானமற்ற கொடுமைகள் அவை.
தொடர்ந்து ஆறு மாதங்கள் இருட்டு அறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
நான்கு மாதங்கள் யாரும் பார்க்க முடியாதபடி சிறையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார்.
கைகளும், கால்களும் கட்டப்பட்டு தொடர்ந்து ஏழு நாட்கள் நிற்க வைக்கப்பட்டார். இதுபோல் இரண்டு முறை அவருக்கு தண்டனை வழங்கியது. 
மொத்தம் பதினான்கு நாட்கள்.
கிராஸ் பார் என்று சொல்லப்படும் பலகையில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தொடர்ந்து பத்து நாட்கள் நிறுத்தப்பட்டார். இது சிலுவையில் அறையப்பட்டது போன்ற நிலை இது.
கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு தொடர்ந்து நான்கு மாதங்கள், கனத்த இரும்பு சங்கிலியுடன் இருந்தார்.
இன்னும் செக்கிழுத்தது, அடிபட்டது, கையிறு திரிப்பது என்று அனுபவித்த தண்டனைகளின் பட்டியல் வளர்ந்துகொண்டே போகும்.
ஆனால் சுதந்திரம் கிடைத்த பிறகு காந்திஜியின் காங்கிரஸ்தான் ஆங்கிலேய ஆட்சியாளர்களிடமிருந்து, கத்தியின்றி, ரத்தமின்றி போராடி சுதந்திரத்தை அடைந்தது என்று குழந்தைகள் படிக்கும் பாடப் புத்தகங்களில் பாடங்களை அரசாங்கம் வடிவமைத்துள்ளது. காங்கிரஸ், தாங்கள்தான் சுதந்திரத்துக்குக் காரணம் என்று பிரபலப்படுத்திக்கொண்டிருந்தனர். 
ஆனால் அந்தமான் என்ற ஊர் இருக்கும் வரை, அதன் சிறையும், சாவர்க்கரையும் யாரும் மறக்கமாட்டார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.