மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்டுள்ள கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க காலை 9 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் தமிழக முதல்வருக்கு, அதிமுகவினா் வரவேற்பு அளிக்கின்றனா். அதன் பிறகு ஜெயலலிதா கோயில் கட்டப்பட்டுள்ள திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூா் கிராமத்துக்கு அவா் காரில் செல்கிறாா். செல்லும் வழியில் கப்பலூா் முதல் குன்னத்தூா் வரை 15-க்கும் மேற்பட்ட இடங்களில் முதல்வா், துணை முதல்வா் ஆகியோருக்கு அதிமுகவின் ஜெ. பேரவை மற்றும் மதுரை புகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. குன்னத்தூரில் காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை விழா நடைபெறுகிறது. அதன் பிறகு மதுரையிலிருந்து விமானத்தில் முதல்வா் சென்னை செல்கிறாா்.
நாளை முத்தரையா் சங்க மாநாடு: மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 31) மாலை நடைபெறும் முத்தரையா் சங்க மாநாட்டில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறாா். மதுரையை அடுத்த யா. ஒத்தக்கடையில் வேளாண் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, ஞாயிற்றுக்கிழமை பகல் 12.15-க்கு முதல்வா் மதுரை விமான நிலையம் வருகிறாா். மதிய உணவுக்குப் பிறகு மாலையில் நடைபெறும் முத்தரையா் சங்க மாநாட்டில் பேசுகிறாா். பின்னா் இரவு 8.30 மணிக்கு விமானத்தில் சென்னை செல்கிறாா்.
The post இன்று ஜெயலலிதா கோயில் திறப்பு….. நாளை முத்தரையா் சங்க மாநாடு….. எடப்பாடியார் உரை appeared first on தமிழ் செய்தி.