Type Here to Get Search Results !

இன்றைய ராசிபலன் – Latest Astrology…!

 

14-04-2021, சித்திரை 01, புதன்கிழமை, துதியை திதி பகல் 12.48 வரை பின்பு வளர்பிறை திரிதியை.

பரணி நட்சத்திரம் மாலை 05.22 வரை பின்பு கிருத்திகை.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 0.

தமிழ் (பிலவ) வருட பிறப்பு.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

இன்றைய ராசிப்பலன் – 14.04.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதாரநிலை மேலோங்கி இருக்கும்.

குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். குடும்ப தேவைகளை சமாளிக்க சிக்கனமாக இருப்பது நல்லது. வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் தடையின்றி வசூலாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். அசையா சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதையும் நிதானமாக செய்வது நல்லது. பணியில் கவனம் தேவை.

துலாம்

உங்களின் ராசிக்கு உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் வேற்று மொழி நபர்களின் உதவியால் அனுகூலங்கள் உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபார வளர்ச்சிக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.

மீனம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவு விஷயத்தில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.