தமிழ் பிலவ வருடத்தில் கிரகங்களின் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்களை திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் காண்போம்.
கிரக அமைப்புகள் :
ராசியில் குருவும்
இரண்டாம் இடத்தில் புதனும்
மூன்றாம் இடத்தில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்
நான்காம் இடத்தில் ராகுவும், செவ்வாயும்
பத்தாம் இடத்தில் கேதுவும்
பனிரெண்டாம் இடத்தில் சனியும் அமர்ந்திருக்கும் தருணத்தில் பிலவ வருடமானது பிறக்கிறது.
பலன்கள் :
பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் அனைவரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் உயரும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள்.
நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. விவேகமான முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கும்.
பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :
பொருளாதாரத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். எதிர்காலம் தொடர்பான சேமிப்புகள் மற்றும் தனவரவுகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாகன பயணங்களில் மிதவேகத்தை கடைபிடிப்பது மிக நன்று.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகளில் கலந்து கொள்வீர்கள். உயர்கல்வியில் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. நண்பர்களின் தன்மைகளை அறிந்து அவர்களுடன் பழகுவது மேன்மையை ஏற்படுத்தும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு மனதில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் வெற்றியை தரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உபரி வருமானங்கள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சிறு தூரப் பயணங்கள் மற்றும் இடமாற்றங்கள் மூலம் புதுவித அனுபவங்களும், மாற்றங்களும் ஏற்படும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு பலதுறை பற்றிய அறிமுகங்கள் உண்டாகும். மேலும், வியாபாரத்தில் நுட்பங்களையும் அறிந்து கொள்வீர்கள். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் காணப்படும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் மற்றும் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வேகத்தைவிட விவேகம் அவசியம் என்பதை புரிந்து சூழ்நிலைக்கேற்ப கருத்துக்கள் மற்றும் வாக்குறுதிகளை அளிப்பது உங்கள் மீதான நம்பிக்கையையும், உறுதியையும் மேம்படுத்தும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வசதி வாய்ப்புகள் மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
வழிபாடு :
சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவு பிறக்கும்.