திருவள்ளூரில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் குடிசையில் இருந்த எரிவாயு உருளை வெடித்து சிதறியதால் அடுத்தடுத்து மளமள பரவியதால் 5 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானாது.
திருவள்ளூர் நகராட்சியில் உள்ள புங்கத்தூர் அம்ஸா நகரில் ரங்கா(35) குடிசை வீடு உள்ளது. இதையடுத்து வேலு, பொன்னுரங்கம், சரவணன், அம்சம்மாள் ஆகியோர் அடுத்தடுத்து 5 குடிசை வீடுகள் அமைத்து குடியிருந்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் கூலி வேலைக்கு பிழைப்பு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் வெள்ளிக்கிழமை காலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர்.
இதற்கிடையே மாலையில் அங்குள்ள ஒரு குடிசையில் மின்சார கசிவால் குடிவீடு தீ பிடித்துள்ளது. அதையடுத்து குடிசைக்குள் இருந்த எரிவாயு உருளையும் வெடித்து சிதறியதால் அடுத்தடுத்து 5 குடிசைகளுக்கும் தீ மளமள என பரவியது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, விரைந்து வந்து தீயை அடுத்த பகுதிக்கு பரவவிடாமல் அணைத்தனர்.
ஆனால், குடிசை வீடுகள் முழுவதும் எரிந்து உள்ளே வைத்திருந்த உடைமைகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. அதேபோல் சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் விரைந்து சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளைச் சேர்ந்தோர் கூறுகையில், இந்த தீ விபத்தில் வீட்டிற்குள் வைத்திருந்த பொருள்கள், உடைமைகள் அனைத்தும் எரிந்து நாசமானது.
அதனால், எங்களுக்கு அரசு வீடு அமைத்துக் கொடுக்கவும், எரிந்து போன ஆவணங்களை வழங்கவும் கோரிக்கை வைத்தனர். உடனே வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக வட்டாட்சியர் உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரிசி மூட்டை, சேலை, வேட்டிகள் ஆகியவைகளையும் வழங்கினார்.
The post திருவள்ளூரில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து appeared first on தமிழ் செய்தி.