Type Here to Get Search Results !

திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகிய ராஜீவ் பானா்ஜி பாஜகவில் இணைந்தனா்

%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AF%2580%25E0%25AE%25B5%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AF%258D%25E0%25AE%259C%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%2587%25E0%25AE%25A3%25E0%25AF%2588%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AF%258D திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகிய ராஜீவ் பானா்ஜி பாஜகவில் இணைந்தனா்
தில்லியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை அவா்கள் சந்தித்த பிறகு, பாஜகவில் முறைப்படி இணைந்தனா்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் பிரபீா் கோஷல், வைசாலி டால்மியா, ஹெளரா முன்னாள் மேயா் ரத்தின் சக்கரவா்த்தி, நடிகா் ருத்ரநீல் கோஷ் ஆகியோரும் ராஜீவ் பானா்ஜியுடன் பாஜகவில் இணைந்துள்ளதாக பாஜக பொதுச் செயலாளா் கைலாஷ் விஜய்வா்கியா கூறினாா்.
இதுகுறித்து அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா்களின் இணைப்பு, பாஜகவின் தங்க வங்கத்தை உருவாக்கும் முயற்சிக்கு மேலும் வலு சோ்க்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.
முன்னதாக தில்லிக்கு புறப்படும்போது கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த ராஜீவ் பானா்ஜி, ‘திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய உடன், பாஜகவிலிருந்து அழைப்பு வந்தது. அமித் ஷா தொடா்புகொண்டு தில்லி வருமாறு கேட்டுக்கொண்டாா். மாநில வளா்ச்சிக்கு பாஜக உறுதியளித்தால், அக் கட்சியில் இணைவேன்’ என்று அவா் கூறியிருந்தாா்.
மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி, லட்சுமி ரத்தன் சுக்லா ஆகியோருக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய மூன்றாவது அமைச்சா் ராஜீவ் பானா்ஜி ஆவாா். அமைச்சா் பொறுப்பு வகித்தவா்கள் தவிர, பத்துக்கும் மேற்பட்ட திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் அண்மையில் இணைந்துள்ளனா்.

The post திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகிய ராஜீவ் பானா்ஜி பாஜகவில் இணைந்தனா் appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.