Type Here to Get Search Results !

ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்டுள்ள கோவிலை, முதல்வர், துணை முதல்வர் இன்று திறந்துவைப்பு

%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25A3%25E0%25AF%2588%2B%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%2587%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581%2B%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581 ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்டுள்ள கோவிலை, முதல்வர், துணை முதல்வர் இன்று திறந்துவைப்பு
மதுரை மாவட்டம், திருமங்கலம் டி.குன்னத்துாரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில், அம்மா கோவில் கட்டப்பட்டுள்ளது. முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று திறந்து வைக்கின்றனர். சென்னையில் இருந்து விமானம் மூலம், இன்று காலை, 10:00 மணிக்கு வரும் முதல்வர், நேரடியாக டி.குன்னத்துார் செல்கிறார். கோவிலை முதல்வரும், துணை முதல்வரும் திறக்கின்றனர்.
கோ பூஜையில் பங்கேற்று, மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர், 120 பசுக்களை தானம் வழங்குகிறார். நலிவுற்ற, 234 கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்குகிறார். தொடர்ந்து, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற, சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளையின் உரிமையாளருக்கு கார்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். மதியம், 1:50 மணிக்கு, விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
அமைச்சர் உதயகுமார் கூறுகையில், ”தமிழகம், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. அதற்கு காரணம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்கள் தான். முதல் முறையாக, அவருக்காக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது,” என்றார்.

The post ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்டுள்ள கோவிலை, முதல்வர், துணை முதல்வர் இன்று திறந்துவைப்பு appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.