Type Here to Get Search Results !

இந்திய -சீன ராணுவ உயரதிகாரிகள் இடையே 10 வது சுற்று பேச்சு… பிரச்சனையை திசை திருப்ப முயற்சி….!

இந்திய சீன எல்லையான கிழக்கு லடாக் பகுதியில் உள்ள பங்கோங் த்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து சீனா படைகளை முழுவதும் திரும்பப் பெற்றுள்ள நிலையில், இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் இன்று 10 வது சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
கோக்ரா, ஹாட் ஸ்ப்ரிங் மற்றும் டெப் சாங்   உள்ளிட்ட பகுதிகளிலிருந்து  சீனா படைகளை வாபஸ் பெறுவது குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மோதலைத் தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் உருவானது.  இதையடுத்து இரு நாடுகளும் படைகளை எல்லையில் குவிக்கத் தொடங்கின, அதைத் தொடர்ந்து எப்போது வேண்டு மானாலும் போர் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இருநாட்டு ராணுவ உயர்மட்ட  அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தனர். 
அதில் சில உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்தது போர் பதற்றம்  ஒரளவுக்கு தணிந்தது.  தொடர்ந்து ஒன்பது மாதங்களுக்கு மேலாக9  சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளன. அதன் இறுதியில் பாங்காங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு கரையிலிருந்து இரு நாடுகளும் படைகளைத் திரும்பப் பெறுவது என முடிவு எடுக்கப்பட்டது.  அதன்படி கடந்த 10ஆம் தேதி  இரு நாட்டுப் படைகளும் அப்பகுதியில் இருந்து வெளியேறின, இந்நிலையில் இந்தியா-சீனா இடையே கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 5 சீன வீரர்கள் உயிரிழந்ததாக முதல்முறை அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்றையும் அது வெளியிட்டுள்ளது அதாவது இந்த மோதலுக்கு இந்திய வீரர்களே முதற் காரணம் என வலியுறுத்த எழுச்சியின இந்த வீடியோவை வெளியிட்டும்  உள்ளது. அதேபோல்  பேச்சுவார்த்தையை திசை திருப்பவும் அதில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இந்த வீடியோவை வெளியிட்டு இருப்பதாக பாதுகாப்பு மற்றும் அரசியல் வல்லுனர்கள்  தெரிவித்துள்ளனர். 
ஆனாலும் திட்டமிட்டபடியே இந்தியாவுக்கும் சீன கார்ப்பஸ் கமாண்டர் நிலை அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று காலை 10 மணி அளவில்  சீனாவில் மோல்டோவில் சுஷுவில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கோக்ரா,  ஹாட் ஸ்பிரிங், டெப்சாங்,  ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு சீனா நிலைமையை மாற்ற முயற்சித்தது, எனவே அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறும் என தெரிகிறது.  பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே மேனன் பங்கேற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 
அதேபோல் சீனா வெளியிட்டுள்ள வீடியோவில் பாங்காங் த்சோ ஏரிக்கரையிலிருந்து பீரங்கி படைகள், ஆயுதங்கள், தளவாடங்கள், வெளியேறுவதும், சீனா வைத்திருந்த பதுங்குகுழி மற்றும் கட்டுமானங்கள் அனைத்தையும் ஜேசிபி இயந்திரம் மூலம் தகர்ப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.