Type Here to Get Search Results !

சிலர் திட்டமிட்டு அதிமுகவை கைப்பற்ற முயற்சி.... எடப்பாடியார் அதிரடி

 


கிருஷ்ணகிரியில் இன்று அதிமுக சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி கூறியதாவது, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள்.

ஒரு போதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது. கட்சி ஒரு போதும் அவர்களுக்கு தலைவணங்காது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க முடியாது.

அடிப்படை தொண்டன்தான் இனி அதிமுகவில் முதல்வராக முடியும் என்று  கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். பத்தாண்டுகளாக கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து  நீக்கப்பட்ட தினகரன் இப்போது கட்சியை கைப்பற்ற சூழ்ச்சி வலையை பின்னி கொண்டிருக்கிறார். அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து அந்த சூழ்ச்சி வலையில் சிக்கக் கூடாது. எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து நிறைவேற்ற வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்றார்கள். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றி இப்பொழுது பிரம்மாண்டமாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

எண்ணேகோல் புதூர் திட்டத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விரைவில் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். அதேபோல பாரூர் ஏரியிலிருந்து ஊத்தங்கரையில் உள்ள முப்பது ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அப்போது அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி எம்.பி., மாவட்ட செயலாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.