திருப்பூர் சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 23). இவர் இந்து முன்னணி கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இதே பகுதியில் வசிக்கும் தென்காசியை சேர்ந்த உதயகுமார் (வயது 27). என்பவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உதயகுமார் அரிவாளை எடுத்துக் கொண்டு சாலையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை, பிரபாகரன் தட்டிக் கேட்டுள்ளார்.
மேலும், உதயகுமார் வேலை செய்யும் பனியன் கம்பெனியில் சொல்லி, அவரை வேலைக்கு சேர்க்க வேண்டாம் என்றும் கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உதயகுமார், தனது நண்பர் லட்சுமணனுடன் சேர்ந்து நேற்று இரவு, சந்திராபுரம் பகுதியில் வைத்து பிரபாகரனை வெட்டி உள்ளார்.
இதில் படுகாயமடைந்த பிரபாகரன் கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெட்டிய உதயகுமார், லட்சுமணனை திருப்பூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.