இந்திய கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளுக்கு இந்தியா எப்போதும் தோழமையாக இருந்து வருவதை குறிப்பிட்ட ராஜ்நாத்சிங், "இந்தியா எப்போதும் மனிதாபிமான உதவி, போர் அல்லாத வெளியேற்ற உதவி (NEO) தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ளது. இந்த பிராந்தியத்தில் நிகழ்ந்த இயற்கை பேரழிவு தொடர்பான பல நிகழ்வுகளில் முதலில் ஓடி வந்து உதவியது இந்தியாதான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். " என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
அண்டை நாடுகளான மொரீஷியஸ், மாலத்தீவுகள், மடகாஸ்கர், சீஷெல்ஸ் உள்ளிட்டவற்றுக்கு மருத்துவ குழுக்கள் அனுப்பி வைத்துள்ளோம். ரெம்டெசிவிர் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகள் போன்ற மருந்துகள் மற்றும் பிற மருத்துவ பொருட்களுடன் அவர்களுக்கு கொடுத்து உதவியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெங்களூரில் ஏரோ இந்தியா 2021ன் இரண்டாவது நாளில், ஐ.ஓ.ஆர் பாதுகாப்பு அமைச்சர்களின் கான்க்ளேவ் நடைபெற்றது.
13வது ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த புதன்கிழமை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று விமான கண்காட்சியின் நிறைவு நாளாகும்.