சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கே.பி,மனுசாமி, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
பிப்ரவரி 8ம் தேதி பெங்களூருவிலிருந்து சசிகலா சென்னை திரும்ப உள்ளார். இந்நிலையில், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி சண்முகம், தங்கமணி, வேலுமணி, நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர். இனி சசிகலா தமிழகம் வரும்போது தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பி.முனுசாமி;- அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர மற்றவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை. உறுப்பினராக இருந்தாலும் 5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பது அதிமுகவின் சட்ட விதி என தெரிவித்துள்ளார்.