Type Here to Get Search Results !

திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது, மக்கள் இனி ஏமாறமாட்டார்கள்… எடப்பாடியார் கடுமையாக விமர்சனம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் செல்லியம்பாளையத்தில் அதிமுக மகளிர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- அதிமுக தொழிலதிபர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும். ரூ.82,000 கோடி கடன் உதவி வழங்கியுள்ளோம். பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள். கொரோனா காலத்தில் மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அளித்தது. மகப்பேறு நிதியுதவி திட்டத்தை ரூ.18,000ஆக உயர்த்தி வழங்குகிறோம். இங்கு கூடியிருக்கும் மகளிர் அணி முயற்சி செய்தால் சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என மீண்டும் நிரூபிக்கப்படும் என்றார். எனவே தேர்தல் போருக்கு அனைவரும் தயாராகும் படி கேட்டுக்கொண்டார். 
மேலும், பேசிய அவர் ஆத்தூர் தாலுகாவில்  உள்ள தலைவாசல் இனி தனி தாலுகாவாக செயல்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். முதல்வர் திட்டங்களை அறிவித்தபடி உள்ளார். அவர் என்ன மந்திரவாதியா? என மு.க.ஸ்டாலின் கேட்கிறார். தான் மந்திரிவாதி இல்லை, சொல்வதை செய்யும் செயல்வாதி என்றார். 
மனுக்களை வாங்கிறோம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது, மக்கள் இனி ஏமாறமாட்டார்கள். 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால் முதல்வர் பதவிக்காக கோரப்பசியில் மு.க.ஸ்டாலின் உள்ளார் என விமர்சனம் செய்தார். மேலும், மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால்  ஓடோடி வரக்கூடிய பழனிசாமியாக இருப்பேன். நீங்கள் ஆணையிட்டால் அதை செய்யக்கூடிய முதல்வராக இருப்பேன். திமுகவின் தில்லுமுல்லுகளை தகர்த்தெறிந்து அதிமுக வெற்றிபெற மகளிர் பாடுபட வேண்டும் என கூறியுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.