Type Here to Get Search Results !

இந்தியாவின் பட்ஜெட்டில், வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.... பாராட்டும் பன்னாட்டு நிதியம்

 


பன்னாட்டு நிதியத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஜெர்ரி ரைஸ் கூறியதாவது: இந்தியாவின் பட்ஜெட், வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்தி உள்ளது. குறிப்பாக, ஆரோக்கியம், கல்வி, பொது உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இவை முழுமையாக அமல்படுத்தப்பட்டால், இந்தியாவின் வளர்ச்சி மேலும் வலுவானதாக அமையும்.

பட்ஜெட்டில், உணவு மானியங்களை சேர்ப்பதன் மூலம், நிதி வெளிப்படை தன்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதையும் நாங்கள் வரவேற்கிறோம். அதேபோல், நிதித் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், மேலும், அது குறித்த நடவடிக்கைகளின் விபரங்களை எதிர்பார்க்கிறோம்.வ்வாறு, அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.