டில்லியில் ஜனாதிபதி மாளிகை மற்றும் இந்தியா கேட் பகுதிக்கு இடையிலான ராஜபாதையின் மறு சீரமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதிஅளித்தது. இதையடுத்து அத்திட்டத்திற்கான பூமி பூஜை இன்று நடந்தது.
இதில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பூஜை விழாவிற்கு பங்கேற்று அடிக்கல் நாட்டினார். அடுத்த ஆண்டுநடக்கவுள்ள குடியரசு தின விழாவுக்குள் ராஜபாதையின் மறுசீரமைப்பு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.