Type Here to Get Search Results !

தமிழகத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டு மத்திய நிதிநிலை அறிக்கை.. பாஜக தலைவர் எல்.முருகன்

%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25B3%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AF%2588%2B%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%2B%25E0%25AE%25AE%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%2B%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%2588%2B%25E0%25AE%2585%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2588 தமிழகத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டு மத்திய நிதிநிலை அறிக்கை.. பாஜக தலைவர் எல்.முருகன்
தேசத்தின் வளர்ச்சியையும் தமிழகத்தின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு மத்திய நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிதிநிலை அறிக்கையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1.3 லட்சம் கோடி மதிப்பில் நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதன் மூலம் தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகள் வர வாய்ப்பு உள்ளது. இதனால் நிறைய வேலை வாய்ப்பு உருவாகும். தொழில்துறையில் தமிழகம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் வாய்ப்பு இதன் மூலம் உருவாகி உள்ளது. மதுரை கொல்லம் இடையே அதிநவீன தேசிய நெடுஞ்சாலை சேலம் சென்னை பசுமை வழிச்சாலை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் வரவேற்புக்குரியவை. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்லும் வகையில் 35 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
மீனவர் நலனுக்காக சென்னையில் புதிய மீன்பிடி துறைமுகம் கடல் பாசியைப் பதப்படுத்தும் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக 1.16 லட்சம் கோடி மதிப்பில் விவசாயக் கடன் வழங்கத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் முன்வைக்கும் விலையை விட ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதார விலையை அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் வாயிலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்னேற்றத்தைக் கொடுக்கும் நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் நிதிநிலை அறிக்கையை அவர் வரவேற்கவில்லை. அவர் சொல்வதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. தமிழகத்திற்கு இவ்வளவு திட்டங்கள் வந்துள்ளதை வரவேற்க மனம் இல்லை என்பதால் அவர் இவ்வாறு கூறுகிறார்.
தேர்தலுக்காக தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் முத்ரா திட்டம், பிரதமர் வீட்டு வசதி திட்டம், பயிர்க் காப்பீடு உள்ளிட்ட எந்த ஒரு மத்திய அரசுத் திட்டமாக இருந்தாலும் தமிழகத்திற்கு தான் அதிக பலன் கிடைத்துள்ளது.
சேலம் சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தைத் தமிழகத்தின் வளர்ச்சியை, தேசத்தின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கும் சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கிறார்கள். இதற்காக அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட நிலையில் தேசத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எட்டு வழிச் சாலை திட்டத்தைச் செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
பிஜேபி தேசிய தலைவர் ஜேபி நட்டா மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழகத்தில் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாக அறிவித்துள்ளார். அதிமுகவுடன் இணைந்து வரும் சட்டப்பேரவை தேர்தலை பாரதிய ஜனதா கட்சி சந்திக்கவுள்ளது. ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலின் போது அமைக்கப்பட்டுள்ள கூட்டணி அப்படியே தொடர்கிறது. எங்கள் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சி. அதிமுக தலைமையில் தான் தேர்தலை சந்திக்க உள்ளோம். முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக அறிவித்துள்ளது. அந்த முடிவை நாங்கள் ஏற்கிறோம்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒரே வருடத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி தமிழகத்திற்கு அளித்துள்ளார். தமிழகத்தின் நலனில் அதிக அக்கறை இருப்பதால்தான் பிரதமர் மோடி மிகப்பெரிய திட்டங்களை தமிழகத்திற்கு தொடர்ந்து அறிவித்து வருகிறார். ராகுல்காந்தி வருகையால் தமிழகத்தில் காங்கிரஸ் காணாமல் போய்விடும் கூட்டணி வாயிலாக சில எம்பிக்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். தற்போது ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருவது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை காணாமல் போகச் செய்துவிடும்.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை திமுக-காங்கிரஸ் கூட்டணி இதுவரை உறுதி செய்யப்படவில்லை அந்தக் கூட்டணி விரைவில் உடைவதற்கு வாய்ப்பு உள்ளது என்று பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.
சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா எனச் செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த முருகன்..
தமிழகத்திற்கு சசிகலா வந்த பின்னரே இதுகுறித்து தெரியும் என்றும் வந்த பிறகு அரசியல் சூழ்நிலை குறித்துப் பார்க்கலாம் என்றும்  கூறினார். 

The post தமிழகத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டு மத்திய நிதிநிலை அறிக்கை.. பாஜக தலைவர் எல்.முருகன் appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.