ரஜினியின் வீடு போயஸ் கார்டனில் உள்ளது. இந்நிலையில் அதே பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் அருகே புதிய வீடு ஒன்றைக் கட்டுகிறார் தனுஷ். போயஸ் கார்டனில் இன்று நடைபெற்ற புதிய இல்ல பூமி பூஜையில் ரஜினி, அவருடைய மனைவி லதா உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் படம் விரைவில் வெளிவரவுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ள தனுஷ், அத்ராங்கி ரே என்கிற ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவன், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய இரு படங்களில் நடிக்கவுள்ளார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள அவெஞ்சர்ஸ் இயக்குநர்களின் அடுத்த படமான தி கிரே மேன் என்கிற ஆங்கிலப் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார்.
இன்று காலை போயஸ் கார்டனில் தனுஷ் புதிய வீட்டு பூமி பூஜையில் நம் அன்பு தலைவர்..❤️❤️❤️❤️🙏🏼 pic.twitter.com/Bj7cW6eUbM
— RajiniBalu 🤘 (@rajini_balu) February 10, 2021