திருச்செந்தூர் சிவன் கோயில் முன்பு வெள்ளிக்கிழமை காலை அனைத்து சமுதாய மக்கள் அமைப்பினர் பொதுமக்கள், பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் இந்து முன்னணியினர் என நூற்றுக்கணக்கானோர் தரையில் அமர்ந்து திருவிழாவை பக்தர்கள் அனுமதியுடன் நடத்த வேண்டும், சுவாமி வீதி உலா வர வேண்டும் மற்றும் தேரோட்டம் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்திற்கு வழக்குரைஞர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். அனைத்து சமுதாய மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சந்தனராஜ், சண்முகவேல், அமெரிக்கா சர்மா ஐயர், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், நெல்லை கோட்ட பொறுப்பாளர் சக்திவேலன், ஒன்றிய பொதுச் செயலர் ராஜேந்திரன் மற்றும் முருக பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.