நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2021 - 22-ம் ஆண்டில் 10.5 சதவிகிதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
தில்லியில் இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவே தொடரும்.
தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்
தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் கடன் பெறும் சூழல் எளியாக்கப்படும் என்று கூறினார்.
2020-ஆம் ஆண்டு நமது திறன்களையும், முயற்சிகளையும் சோதித்த ஆண்டாக அமைந்தாலும், 2021-ஆம் ஆண்டில் பொருளாதார வரலாற்றில் புதிய நிலையை அடைவோம் என்று கூறினார்.