Type Here to Get Search Results !

அதிமுக,அரசியல்,சட்டமன்ற தேர்தல்,தமிழகம்,தேமுதிக,

 


தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்துவிட்டதால் என்ன நடக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்து வருகிறார்கள். 

ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக அரசு சிறப்பாக ஆட்சி செய்துவருகிறது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றவர் டி.டி.வி. தினகரன்தான். 18 எம்எல்ஏக்களை தன்னோடு அழைத்துச்சென்று அதிமுக ஆட்சியை இறக்க இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியவர் டிடிவி தினகரன்.

தற்போது டிடிவி தினகரன் அதிமுக இணைப்பைப் பற்றி பேசுவது விநோதமாக உள்ளது. சசிகலாவை வரவேற்று சுவரொட்டியை அதிமுகவினர் ஒட்டினால், அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். தேமுதிக இன்னும் அதிமுக கூட்டணியில்தான் தொடர்ந்து நீடித்து வருகிறது.” என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன்  தெரிவித்தார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா சசிகலாவைச் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக  தகவல்கள் வெளியான நிலையில், தேமுதிக- அதிமுக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தேமுதிக அதிமுக கூட்டணியில் நீடிப்பதாக அமைச்சர் மணியன் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.