Type Here to Get Search Results !

மேற்கு வங்க மக்கள் கூறும்போது பதவியை ராஜிநாமா செய்வேன்….. மத்திய அமைச்சர் அமித்ஷா

மேற்கு வங்க மக்கள் கூறும்போது பதவியை ராஜிநாமா செய்வேன் என மத்திய அமைச்சர் அமித்ஷா பிரசாரத்தின் போது தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
நான்காம் கட்ட தேர்தலின் போது மத்திய பாதுகாப்புப் படையால் வாக்குச்சாவடியில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார்.
இதுகுறித்து துப்கூரியில் நடைபெற்ற பிரசாரத்தின் போது அமித் ஷா கூறியதாவது,
மேற்கு வங்க மக்கள் கூறும்போது நான் பதவியை ராஜிநாமா செய்வேன். ஆனால் வரும் மே 2ஆம் தேதி உங்கள் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக இருங்கள் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, பாஜகவை தேவையின்றி மம்தா தவறாக பேசுகிறார். மம்தாவுக்கு எதிராக பாஜக போட்டியிடுகிறது என நினைத்துக் கொண்டுள்ளார். மம்தாவுக்கு எதிராக மேற்குவங்க தாய்மார்கள், சகோதரிகள், ராஜ்போங்ஷி சமூகம், கோர்கா சமூகம், தேயிலைத் தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவரும் உங்களுக்கு எதிராக போட்டியிடுகிறார்கள்.
மம்தா மேற்கு வங்கத்தை பற்றி பேசுவதைவிட என்னைப் பற்றி அதிகம் பேசுவதை காணலாம். 4வது கட்ட வாக்குப்பதிவின் போது மம்தா தூண்டுதலில் வந்தவர்களின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மம்தா அவர்களை தூண்டிவிடாமல் இருந்திருந்தால் அவர்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.