Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நெஞ்சை உலுக்குகிறது…. உலக சுகாதார தலைவர் டெட்ரஸ் அதானோம்….!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நெஞ்சை உலுக்குகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சுடுகாடுகளும் நிரம்பி வழிந்து வருகிறது. டோக்கன் முறையில் சடலங்களை வைத்து கொண்டு நாட்கணக்கில் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
டெல்லியில் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகவலைதளங்களில் உதவி கேட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதானோம் கூறுகையில் இந்தியாவில் கொரோனாவின் மோசமான சூழலை பார்க்கும் போது நெஞ்சை உலுக்குகிறது. முக்கியமான உபகரணங்கள் வழங்குவது, விநியோகம் செய்வது என எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம்.
இதுவரை ஆயிரக்கணக்கில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் ஆய்வுக் கூடங்களுக்கான வசதிகளையும் நடமாடும் மருத்துவமனை வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளோம். கொரோனா பரவலில் இந்தியாவுக்கு உதவ போலியோ, காசநோயை போல் 2600 க்கும் மேற்பட்ட நிபணர்களை அனுப்பியிருந்தோம்.
உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று தொடங்கிய முதல் 5 மாதங்களை ஒப்பிடும் போது கடந்த வாரம் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.