Type Here to Get Search Results !

43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை (மே 28) நடைபெறும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டில்லியில் நாளை (மே 28) நடைபெறும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை நடக்கிறது. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெறும் கூட்டத்தில் நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாகூர், அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று நிதியமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்.
கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், இக்கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோலிய பொருட்களை சேர்ப்பது போன்ற பல நிலுவையில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசிகளுக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்வது, கொரோனா தொடர்பான முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு வரிவிலக்கு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசுகள் முன்வைக்கும் என தெரிகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.