Type Here to Get Search Results !

பாஜக எதிர்காலம் குறித்து…….. அன்பானவர்களே….!

மதமாற்றம் என்னும் கொடிய தொற்று வியாதிக்கு இலக்கான இந்துக்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிக அளவில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.     இவ்வாறு மாற்றுமதத்திற்கு மாறியவர்களுக்கு பாஜகவின் தாமரைச்சின்னத்தைக் கண்டாலே கடுமையான மனவெறுப்பு கொள்ளும் நிலையை அன்னிய மதவாதிகளால் உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது. 
இவ்வாறு இந்து சமய மற்றும் இயக்கங்களுக்கான ஆதரவுகள் மற்றும் பாஜக ஆதரவு வாக்கு வங்கிகள் குறைந்து வருவதற்கான காரணம் மதமாற்றமே.
இது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தானே என தொடர்ந்து படிப்பதை நிறுத்தி விடாதீர்கள்.   இந்த மதமாற்றத்திற்கான ஏராளமான  காரணங்கள் இருக்கையில் ஒருசில முக்கிய காரணங்களை பார்ப்போம். 
1.   மடாதிபதிகள்,  பீடாதிபதிகள்,  சமயத் தொண்டு பிரதிநிதிகள் இவர்களெல்லாம் ஏழை இந்து குடும்பங்களின் அடிப்படை வாழ்வாதாரங்களைக் குறித்து கவலைப்படுவதில்லை.     பின்தங்கிய  ஏழை மற்றும் கீழ்சாதி இந்துக்களை  இந்து சமய மேலோர்கள் அடிக்கடி  சந்தித்து அவர்களோடு அன்புடன் உரையாடி இந்து சமய வேதாந்த தத்துவங்களைக் குறித்து அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை.     பிறருடன் தானாகப் போய் இந்து மத அருமை பெருமைகளை சாதாரண பேச்சு வாக்கிலேயே அவ்வப்போது எடுத்துக் கூறுவதும்  இந்து சமய பொறுப்பாளர்களிடம் அறவே இல்லை.    கேட்டால்,  அதெல்லாம் ஒன்றுமில்லை;   ” நம்மாளுங்க அப்படியொன்றும் மதம்மாற மாட்டார்கள் ”  என்று மிதப்பு கலந்த பதில்தான் வரும்.     இவர்கள் இப்படி பதில் தரும் நேரத்திலேயே  ஒன்றிரண்டு இந்துக் குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிக்கொண்டி ருப்பார்கள்.    மடாதிபதிகள் பீடாதிபதிகள் எல்லாம் மாநிலம் முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்று ஏழை இந்து மக்கள் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு வேதங்கள் பயிற்றுவிக்க ஏற்பாடுகள் செய்யவும் தாங்களும் அதில் கலந்து கொள்ளவும் வேண்டும்.    சிறுசிறு பொறுப்பு அமைப்புகளை அவர்களிடையே ஏற்படுத்திக் கொடுத்து அவற்றை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.        இப்படி நடக்கவில்லையே!?  நடப்பதும் ஒழுங்காக இல்லையே? 
2.   உண்மையான உண்மை எனும் இந்து வேதாந்த தத்துவங்களை  தினம்தோறும் சகல இந்து மக்களுக்கும் கேட்கும்படி,  கேட்டுப் புரியும்படி அதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும்.     இது மாற்றுமதத்தினருக்கு கைவந்தக் கலை.     ஆனால் சனாதன தர்மத்தின் வழி நடப்பவர்களாக தம்மை நினைத்துக் கொள்பவர்கள்  தாங்கள் எதையெல்லாமோ கடந்து விட்டதாக நினைத்து 
தங்களது சுயவாழ்க்கை விஷயங்களில் மட்டுமே கவனத்தை செலுத்தி வாழ்ந்து முடிக்கின்றனர் என்பது வேதனையான விசயம்.    பக்கத்து வீட்டு ஏழைகளான இந்துக்களிடம் மனதார அன்பு செலுத்துவது,  அவர்களின் இன்ப துன்பங்களில் முடிந்த அளவு பங்கெடுப்பது என்று உயர்நிலை இந்துக் குடும்பங்களின் மனதில்  தோன்றுவது என்பது  அபூர்வம்.     பெயரளவிற்கு  ஏதோ கடனுக்காக போய் தலையைக் காண்பித்து விட்டு வருவார்கள்.   ஆனால்,   மாற்றுமத போதகர்களும் அவர்களுடன் சில ஆதரவாளர்களும் சேர்ந்து மாற்றுமத வீடுகளில்  கும்பலாக வந்து  எந்நிலை ஏழைக்குடும்ப விழாக்களிலும் கலந்து கொண்டு ஆதரவு தருவதுடன் தங்களது மதபோதனையுடன் பிரார்த்தனையையும்  செய்துவிட்டுப் போவார்கள்.    ஆனால்,  ஏழை மற்றும் நடுத்தர இந்துக் குடும்பங்கள் இவ்விசயத்தில் நடுத்தெருவில் கைவிடப்பட்டது போல் இருப்பது வேதனை. 
3.   இந்துமதக் கோட்பாடுகளை இந்துவெனும்  இவனுக்கு விவரித்துச் சொல்ல குருக்களென யாருமே அமைவது என்பது குதிரைக்கொம்பு.     
பகவத்கீதை உபதேசிக்கப்படவில்லை;       சிவபுராணம் புரியவில்லை;   சொல்வதைக் கேட்டறிய மனமும் இல்லை.   ஆனால், பைபிளை  படித்தறிய  விவேகமும் வேண்டியதில்லை.     இதனால்  பைபிளைப் படிப்பதே சுலபமாக தோன்றியது.       ஆக,  பைபிளைப் படிக்க விருப்பப்படுத்தப் பட்டதால் விரும்பினான்;  படித்தான்;   நம்பினான்.     இதுவரை   300 தடவைகளில்   திருத்தப்பட்ட  வசனங்களடங்கிய பைபிளை படித்தான்.     தேவனுடைய வார்த்தைகளுக்கு மாறிமாறி 300 தடவைகள் திருத்தம் ஏன்?    உண்மைக்கு ஏது திருத்தம் தேவை?    
4.  ஒரு  இந்துவின் வீட்டிலே ஏழ்மை தாண்டவமாடுகிறது.    அடுத்த நேரம் அடுப்பெரிக்க வழியில்லை.    பெற்றோருக்கு நான்கு குழந்தைகள்.   பிழைக்க வழியின்றி பக்கத்துக்காரர் வழியாக பல இடங்களுக்கு வேலைக்குச் சென்று  குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள்.    வேலை பார்க்கும் இடத்தில் சக வேலைக் காரர்களால் மன மாற்றம் செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்.    அல்லது மதமாற்றும் மிஷனரி நிர்வாகத்தினரால் தங்களது அலுவலகங்களில் சிறு சிறு உதவி ஆட்களாக  இந்த ஏழை இந்துக்கள்  நியமிக்கப்பட்டு  அதன்வழியே மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்.  இந்த ஏழை இந்துக்களின் வறுமையின் காரணத்தால் இவர்களுக்கு சிறு சிறு பரிசுகள் – கவர்ச்சிகரமான பரிசுகள் அளிக்கப்பட்டு இவர்கள் மனோவசியம் செய்யப்பட்டது போல் மன மாற்றம் செய்யப்பட்டு மதம் மாறுவதால்   புதிய மதத்தில் அதிதீவிர வெறியுடனே  இருக்கிறார்கள்.    ஆனால்,  
இப்படி மதம்மாறிச் சென்ற  பூர்வ இந்துக்கள் கிறிஸ்தவ சமுதாய அமைப்புகளின் கல்லூரிகள்  அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் மிக பெரிய  சிறப்பான பதவிகளைப் பெற்று  மாதச் சம்பளத்துடன் செல்வச்செழிப்புடன் ஆகி இருக்கிறார்கள் என்பது உண்மை.   தினக்கூலி காரர்களின் மக்கள் கிறிஸ்தவ மதம் மாறி சென்றதால் கிறிஸ்தவ சமுதாயத்தினரின் உதவியுடன் மேற்படிப்புகள் பலவற்றை படித்து பெரும் பட்டங்களை பெற்று நல்ல நல்ல உயர் பதவிகளில் இருந்து தாராளமாய் சம்பாதிக்கிறார்கள்.     மதமா(ற்)றிகளின் மாவட்டமான  கன்னியாகுமரி மாவட்ட நிலை இதுவே.    இவ்வாறு இரண்டு தலைமுறைகளுக்கு முன் தினப்பாடு தீர்க்க கஷ்டப்பட்ட ஏழை இந்துக்கள் எல்லாம் இன்று மதம் மாறிய ஒரே காரணத்தால்  உயர்நிலையில்  இருக்கிறார்கள்.   ஆக மதமாற்றத்தின் மூலம் தனி குடும்ப பொருளாதார வளர்ச்சி கல்வி வளர்ச்சி வாழ்க்கை மேம்பாடு அநாகரிக மாற்றங்கள் என நிறைய வந்து விட்டது.      ஆனால் மதம் மாற மாட்டேன் என்று சுய வைராக்கியத்துடன் இருக்கும் இந்துவின் நிலையோ பழங்கதையே.     இதனால் குமரி மாவட்டத்தைப் பொருத்தவரை மிச்சம் மீதி இருக்கும் ஏழை இந்துக் குடும்பங்களில் அநேகர் நாமும் மதம்மாறிப் போய் விடுவோமா என யோசனையில் கூட இருப்பதாகத் தோன்றுகிறது.      இந்நிலை மாறி இந்துவின் வளம் செழிக்க வேண்டுமானால் ஏழை இந்துக்களின் வாழ்வாதார   தரம் இந்து சமுதாயப் பெரியோர்களால் உயர்த்தப்பட வேண்டும். இந்து அரசாங்கத்தாலும் உயர்த்தப்பட வேண்டும்.     நேருவால் வஞ்சகமாக இந்துக்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட சகதிச் சட்டங்களை  மாற்றவேண்டும்.    
5.   இவ்விதமாய் பாரததேசம் முழுவதும் தினம்தினம் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிக் கொண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத விஷயம்.     இப்படியே போனால் குறைந்தது 10 வருடத்திற்குள் பாரத தேசத்தில் 70%  அந்நிய மதத்தினர் ஆகிவிடுவார்கள்.   எனவே இனியும் ஒரு கணமும் தாமதிக்காமல் அனைத்து இந்து ஆன்மீக பெரியோர்கள் ஒன்றிணைந்து அடிமட்ட இந்த ஏழை சமுதாய மக்களை உடனடியாக தினந்தோறும் சந்திக்க ஏற்பாடு செய்து அவர்களோடு கலந்து பேசி இந்து மத தத்துவங்களையும் வேதாந்த சாஸ்திரங்களையும் எடுத்துக்கூறி அவர்கள் மனதில் நான் இந்து என்கிற ஒரு சிறப்பான உணர்வையும் முழுமையாக நிலையாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.    அப்படி கொடுத்தால் மட்டுமே அவர்கள் இன்னொரு மதத்தை – வேண்டாததை தேடிப் போக மாட்டார்கள் என்பது உண்மை. 
6.  மதமாற்றம் என்பது ஒரு வகை மன மாற்றமே!  அப்படி மனம் மாறாமல் இருக்க வேண்டுமானால் அவன் மனம் நிலையானதாக இருக்க வேண்டும்.    இந்து என்ற உணர்வு மட்டுமல்ல இந்து மதத்தில் இருக்கக்கூடிய இறை  சாஸ்திரங்கள் உண்மையானவை,   இந்துமதத் தத்துவம் முழு உண்மையானது என்பதை அவன் மனதில் நிலையாக கொள்ள வேண்டும்.  
7.   சேவாபாரதி போன்ற அமைப்புகள்  மக்களுக்கு பல்வேறு நல்ல காரியங்களைச் செய்தாலும் அது கிராமம் கிராமமாக மக்களை சென்று இன்னும் முழுமையாக அடைய வில்லை.   இப்படி மதம் மாறுவதற்கு காரணமாக பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் அனைத்தும் மாறிப்போகிறது,  எதிர்கட்சிகளுக்கு செல்கிறது என்பதை புரிந்துகொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை.     இந்த நடவடிக்கை என்பது மதமாற்றத்தை தடுக்காமல் மனமாற்றத்தை தடுப்பதே.    அதாவது மனம்  மனமாற்றத்தை தடுப்பது என்பது இந்து ஆன்மீக உணர்வை ஊட்டுவது மட்டுமே.   மாறாக மிரட்டி ஒடுக்கி வைப்பதால் எப்பயனும் இல்லை. 
8.  இந்த மதமாற்றத்தின் பலனாகவே  குமரிமாவட்டத்தில்  பாஜக வெற்றிபெற முடியாமல் போகிறது.   இப்படி மாற்று மதத்திற்கு செல்பவர்களால்  இனி எதிர்கட்சிகளுக்கு தேர்தல் பிரச்சாரம் தேவைப்படாது என்பது உறுதி.   பிரச்சாரம் இல்லாமலே அவர்களுக்கு வெற்றி நிச்சயம்.
பிரதமர் மோடியின் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் எதுவுமே பெரும்பாலான கடைநிலை இந்து மக்களுக்கு போய் சேரவில்லை;    அதை ஆளும் பாஜக  நிர்வாகிகள் யாரும் கொண்டு சேர்க்கவும் இல்லை. 
9.   வர்ணம் என்பது வேறு ஜாதிப் பிரிவு என்பது வேறு ஜாதியை ஒழியுங்கள். சாதித்துக் காட்டுவீர்கள்.
     
இப்படிக்கு  வேதனையுடன்
       பாமர இந்துவான இந்தியன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.