Type Here to Get Search Results !

Breaking News… 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு முதல்வர் அதிரடி உத்தரவு…!

 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கிய நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி சில கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கில் காய்கறிகள், மலர்கள் விற்பனை கடைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது போல பழக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சாலை வரிக் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு. சிட்கோ நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய மனைவிலை தவணை வாடகை செலுத்த மேலும் ஆறு மாத காலம் அவகாசம் நீட்டிப்பு. மே மாதத்தில் காலாவதியாகும் ஆட்டோ, கால்டாக்சி வாகனங்களுக்கான காப்பீடு செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.