Type Here to Get Search Results !

மோசடி மன்னன் Mehul Choksi அதிரடி கைது….! டொமினிகா தீவில் பிடிபட்டார் படகில் தப்பியபோது சிக்கினார்

ஆன்டிகுவா நாட்டில் இருந்து தப்பிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியாளர் மெகுல் சோக்ஸி டொமினிகா தீவில் பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கியில்( பிஎன்பி) ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்தவர் மெகுல் சோக்ஸி. மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்ஸி கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரீபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவாவுக்கு குடும்பத்துடன் தப்பினார்.
அந்த நாட்டின் குடியுரிமையையும் அவர் பெற்றுள்ளார். இந்த நிலையில் மெகுல் சோக்சி அந்த நாட்டில் இருந்து மீண்டும் வேறொரு நாட்டிற்கு தப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு ஆன்டிகுவா போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தப்பி ஓடிய மெகுல் சோக்ஸி டொமினிகா தீவில் பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது படகு மூலம் கியூபாவுக்கு தப்பிச்செல்ல முயன்றபோது கரீபியன் நாடுகளில் ஒன்றான டொமினிகா நாட்டில் அவரை உள்ளூர் போலீசார் மடக்கி பிடித்ததாக கூறப்படுகிறது. தற்போது டொமினிகா போலீசார் காவலில் வைக்கப்பட்டுள்ள மெகுல் சோக்ஸியை ஆன்டிகுவா அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.