Type Here to Get Search Results !

முதல்வர் ஸ்டாலின்… முதல்வர் கேஜரிவால்… முதல்வர் மம்தா… முதல்வர் பினராய் விஜயன்…. இந்த நால்வருக்கும் எழுதப்பட்ட பதிவு

 
இந்த நால்வருக்கும் எழுதப்பட்ட பதிவு இது . அவர்களைப்பற்றிய பதிவல்ல .ஆனால் அவர்கள் படிக்கவேண்டுமென்ற ஆசையில் பதியப்பட்டது
யாரவது அவர்களிடம் இந்தப்பதிவை காட்டினால்  தன்யனாவேன்.
 
பிரதமர் சமீபத்தில் புயல் சேதங்களை  பார்வையிட  கிழக்கிந்தியா சென்றார் .அவசரமாக முடிவெடுத்ததால் தாமதமாகத்தான் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு தகவல் சொல்லப்பட்டது.
எனினும் தன்னுடைய  நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு பிரதமருடன்  ஏரியல் சர்வேயில் கலந்துகொண்டார் நவீன்.
முடிந்ததும் ரிவியூ மீட்டிங்கில் கவர்னருடன் கலந்துகொண்டார் .எதிர்க்கட்சி தலைவருக்கும்  அழைப்பு அனுப்பப்பட்டது . ஆனால் உடல்நலமில்லாததால் அவர் கலந்து கொள்ளவில்லை  .
தன்  கருத்துக்களை  பிரதமருடன் பகிர்ந்தவர் கூட்ட முடிவில் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட ஷரத் துகளையும் சேர்த்து  அருமையான சேத அறிக்கை ஒன்றை கொடுத்தார் பிரதமரிடம் .
அடுத்த ஆச்சரியமாக  புயல் வருமுன்னே சேதங்களை குறைக்க மாநிலம் எடுத்த முன்னேற்பாடுகளை விளக்கி ஒரு தனி அறிக்கை கொடுத்து  பிரதமரை ஆச்சரியப்படுத்தினார் .
மகிழ்ச்சியுடன் எழுந்த பிரதமர் வாத்சல்யத்துடன்  ( நன்றி பத்மாசினி மேடம் ) நவீனை கட்டியணைத்து விடைபெற்று  ..
”  சேதங்களுக்கு நிவாரணமாக எவ்வளவு பணம் தேவை ?  ” என்று கேட்டார் .
அதற்கு நவீன் கொடுத்த பதிலை கேட்டு மயங்கி விழுந்துவிடாதீர்கள்  .
அவர் கொடுத்த பதில் :
” இந்த பண்டமிக்  நேரத்தில்  தேசத்துக்கு நிறைய செலவுகள் இருக்கும் .நாங்கள் மாநில வருவாயிலிருந்தே சமாளித்துக்கொள்கிறோம்  .நீங்கள் இந்த நேரத்திலும் நேரம் செலவழித்து வந்தது தென்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது  .            
 நன்றி ஐயா ”   
கனிந்த உள்ளத்தோடு  பிரதமர் விமானம் எற …அடுத்த வேலைக்காக விரைந்தாராம் நவீன்  .
மனிதருள் மாணிக்கம் – இருவருமேதான் இல்லையா? 
அந்த நாலு பிரகஸ்பதிகள் இதை படித்தால் மட்டும் திருந்தி விடுவார்களா என்ன?

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.