Type Here to Get Search Results !

நேற்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தை குறியீடுகள் புதிய சாதனையை படைத்தன….! In yesterday’s trade, stock market indices set a new record ….!

கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது மற்றும் பல மாநிலங்களில் தளர்வுகளை அறிவித்து வருவது ஆகிய காரணங்களால் சந்தை உயர்ந்துள்ளது. தளர்வுகள் அதிகரித்து; பாதிப்புகள் குறைந்து வருவதால், பொருளாதாரம் மீட்சியடையும் என்ற நம்பிக்கை, சந்தை உயர்வுக்கு காரணமாக அமைந்தது.மேலும் தனியார் வங்கிகள், வாகன துறை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் விலை அதிகரித்ததும், சந்தை சாதனை படைக்க உதவிகரமாக அமைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ நேற்றைய வர்த்தகத்தில், 228 புள்ளிகள் அதிகரித்து, 52,328 புள்ளிகளை தொட்டு, புதிய சாதனை படைத்தது.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 81.40 புள்ளிகள் உயர்ந்து, 15,751 புள்ளிகளை எட்டி சாதனை படைத்துள்ளது.
‘சென்செக்ஸ்’ பிரிவில், பவர்கிரிட் விலை அதிகளவில் ஏற்றம் கண்டது. இப்பங்கு விலை கிட்டத்தட்ட, 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, ‘என்.டி.பி.சி., டெக் மகிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ ஆகிய நிறுவன பங்குகளும் விலை அதிகரித்தன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.