Type Here to Get Search Results !

இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வந்தது…. நேபாள பிரதமர் சர்மா ஒலி தகவல்… Disagreements with India have come to an end …. Nepal Prime Minister Sharma Oli Information …

இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வந்துவிட்டதாக, நேபாள பிரதமர் சர்மா ஒலி கூறியுள்ளார்.
நம் அண்டை நாடான நேபாளத்தின் பிரதமர் சர்மா ஒலி, சமீபத்தில் பி.பி.சி., நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவுடன் உள்ள எல்லை பிரச்னைக்கு வரலாற்று ஒப்பந்தங்கள், வரைபடங்கள் மற்றும் உண்மை ஆவணங்கள் வாயிலாக தீர்வு காணப்படும்.எங்களுக்கும், இந்தியாவிற்கும் இடையே, தவறான புரிதல்கள் காரணமாக சில பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவற்றுக்கு தீர்வு காணப்பட்டதுடன், எதிர்கால இலக்கை நோக்கி, நாங்கள் ஒற்றுமையுடன் பயணிக்கிறோம். அண்டை நாடுகள், தங்கள் அன்பையும், பிரச்னைகளையும் பகிர்ந்து கொள்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய பகுதிகளான லிம்பியாதுரா, கலாபானி மற்றும் லிபுலேக் ஆகியவை, நேபாளத்திற்கு சொந்தமானவை என, குறிக்கும் வகையில், அரசியல் வரைபடத்தை கடந்த ஆண்டு அவர்கள் வெளியிட்டனர்.இதற்கு மத்திய அரசு, கடும் எச்சரிக்கை மற்றும் கண்டனம் தெரிவித்தது. இந்த பிரச்னையை அடுத்து, இரு தரப்பு உறவுகளிலும் ஏற்பட்ட தவறான புரிதல்கள், தொடர் பேச்சு காரணமாக தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.