உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் நாளை (ஜூலை 1) முதல் இணைய வகுப்புகளை மீண்டும் தொடங்க உள்ளன.
கொரோனா தொற்று பரவுவதால், பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டு இணைய வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
பள்ளிகளுக்கான கோடை விடுமுறை இன்று முடிவடைவதால் உத்தரகண்டில் வகுப்புகளை மீண்டும் தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நோய் பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று மாநில பள்ளி கல்வித் துறை இணைச் செயலாளர் ஜே.எல். சர்மா புதன்கிழமை தெரிவித்தார். .
பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் வரை இணைய வகுப்புகள் நடத்தப்படும் என்று அவர் விளக்கினார்.
உத்தரகண்ட் மாநிலத்தில், தற்போது 2,245 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.