Type Here to Get Search Results !

43 பேர் புதிய மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்…. 43 new Union Ministers have been sworn in ….

 

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தில் 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

கடந்த 2019-ம் ஆண்டு வெற்றி பெற்று 2-வது பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கப்பட்டது.. இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் வகையிலும், அனைத்து சமூகங்களின் சரியான பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் புதிய அமைச்சரவை விரிவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராஜினாமா, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்வார், தபாஸ்ரீ சவுத்ரி, சதானந்த கவுடா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்..

இதுவரை மொத்தம் 12 பேர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த ராஜினாமா கடிதங்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இந்நிலையில் புதிய மத்திய அமைச்சர்கள் 43 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 14 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் ஆவர்.

இன்று பதவியேற்றுக் கொண்ட புதிய அமைச்சர்கள் :

  1. நாராயண் தாட்டு ரானே
  2. சர்பானந்த சோனோவால்
  3. வீரேந்திர குமார்
  4. ஜோதிராதித்ய சிந்தியா
  5. ராமச்சந்திர பிரசாத் சிங்
  6. அஸ்வினி வைஷ்ணவ்
  7. பசுபதி பரஸ்
  8. கிரண் ரிஜ்ஜிஜு
  9. ராஜ்குமார் சிங்
  10. ஹர்தீப் சிங் பூரி
  11. மன்சுக் மாண்டவ்யா
  12. பூபேந்தர் யாதவ்
  13. பர்ஷோத்தம் ரூபாலா
  14. கிஷண் ரெட்டி
  15. அனுராக் சிங் தாகூர்
  16. பங்கஜ் சவுத்ரி
  17. அனுபிரியா சிங் படேல்
  18. சத்யபால் சிங் பாகெல்
  19. ராஜீவ் சந்திரசேகர்
  20. ஷோபா கரண்லாஜே
  21. பானு பிரதாப் சிங் வர்மா
  22. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்
  23. மீனாட்சி லேகி
  24. அன்னப்பூர்ணா தேவி
  25. நாராயண சாமி
  26. கௌஷல் கிஷோர்
  27. அஜய் பட்
  28. பி.எல். வர்மா
  29. அஜய் குமார்
  30. சவுகான் தேவுசின்
  31. பகவந்த் குபா
  32. கபில் மோரேஷ்வர் பாட்டீல்
  33. பிரதிமா பவுமிக்
  34. சுபாஸ் சர்கார்
  35. பகவத் கிஷன்ராவ் காரத்
  36. ராஜ்குமார் ரஞ்சன் சிங்
  37. பாரதி பிரவீன் பவார்
  38. பிஸ்வேஷ்வர் துடு
  39. சாந்தனு தாக்கூர்
  40. முன்ஜபாரா மகேந்திர பாய்
  41. ஜான் பர்லா
  42. எல். முருகன்
  43. நிஷித் பிரமானிக்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.