Type Here to Get Search Results !

2020 ஆண்டில் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சுமார் 25 கோடி யூனிட்டுகளை விற்று சாம்சங் நிறுவனம் முதலிடம்

%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%2599%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D 2020 ஆண்டில் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சுமார் 25 கோடி யூனிட்டுகளை விற்று சாம்சங் நிறுவனம் முதலிடம்
ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த புதிய அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் 25.57 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று, 19 சதவீத பங்கைக் கைப்பற்றியுள்ளது தென் கொரிய சாம்சங் நிறுவனம்.
பண்டிகை காலாண்டில், (அக்டோபர்-டிசம்பர்) சாம்சங் 6.25 கோடி ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்யுள்ளது. கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்ற தயாரிப்புகளைவிட அதிகம் ஏற்றுமதி ஆகியுள்ளன.
ரியல்மி இந்த ஆண்டின் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டாக மாறியது. ஏற்றுமதி அளவுகளில் 65 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.
2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தை 1 சதவீதம் சரிந்தது. இருப்பினும் 2020 ஆம் ஆண்டில் மொத்தமாக 8 சதவீதம் உயர்ந்தது.
கரோனா பொதுமுடக்க காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள், பொழுதுபோக்கு, அலுவலக வேலைகளால் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளன.
இதில், நான்காவது காலாண்டு மட்டும் எடுத்துக்கொண்டால் உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் முதலிடத்தைப் பிடித்தது. அதேபோல ஸியோமியின் ஏற்றுமதி 31 சதவீதம் அதிகரித்து 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 4.30 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. ஒப்போ 3.40 கோடி யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. கூகுளின் பிக்சல் 4 ஏ மற்றும் பிக்சல் 5 ஆகியவையும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

The post 2020 ஆண்டில் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சுமார் 25 கோடி யூனிட்டுகளை விற்று சாம்சங் நிறுவனம் முதலிடம் appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.