41 தொகுதிகளை ஒதுக்கும் கட்சியோடுதான் கூட்டணி மீண்டும் கூறுகிறது. தேமுதிகவின் இந்த மாறுப்பட்ட கருத்துகளால் அதிமுக கூட்டணியில் அக்கட்சி இருக்குமா இல்லையா என்ற கேள்வி இருந்து வருகிறது. இந்நிலையில் 41 தொகுதிகள் வழங்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி என்று அக்கட்சி மீண்டும் தெளிப்படுத்தியுள்ளது,
தேமுதிகவின் சட்டப்பேரவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி பங்கேற்றார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பார்த்தசாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பே இல்லை. அதிமுக கூட்டணியில் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 41 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டும் 41 தொகுதிகளைக் கேட்க உள்ளோம். நாங்கள் கேட்கும் இடத்தை கொடுப்பவர்களுடன் கூட்டணி அமையும். தேமுதிக தனித்து போட்டியிடுவது குறித்து பொதுக்குழு கூட்டத்துக்குப் பின் அறிவிக்கப்படும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்கள் கொடுக்கும் கட்சியுடன்தான் கூட்டணி அமையும். பொதுக்குழுவுக்குப் பின் பிரசாரம் செய்வது பற்றி அறிவிக்கப்படும். கூட்டணியில் இருப்பதால் தேர்தல் அறிக்கை தயாரிக்கவில்லை.” என்று பார்த்தசாரதி தெரிவித்தார்
The post அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்குமா இல்லையா என்ற கேள்வி…? மீண்டும் 41 தொகுதி…! first appeared on தமிழ் செய்தி.
The post அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்குமா இல்லையா என்ற கேள்வி…? மீண்டும் 41 தொகுதி…! appeared first on தமிழ் செய்தி.