அசாமில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அம்மாநில முதல்வர்
சர்பானந்தா சோனோவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
அசாம் தேர்தலில் காலை 12 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் ஒரு இடத்திலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
சட்டப்பேரவையின் மொத்தம் 126 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
அதில், பாஜக கூட்டணி 85, காங்கிரஸ் கூட்டணி 39, பிற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.